NATIONAL

பெய்லி பாலம் அனைத்து வகையான இலகுரக வாகனங்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது

குவாந்தான், மார்ச் 7: ரோம்பினில் உள்ள ஃபெல்டா செலாஞ்சார் மற்றும் பெர்விரா ஜெயா பிரதான சாலையில் உள்ள பெய்லி பாலம், அனைத்து வகையான இலகுரக வாகனங்களுக்கும் இன்று ஒரு வழிப்பாதையை திறந்துள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, இன்று முகநூல் பதிவின் மூலம் பாலத்தைப் பயன்படுத்த 40 டன் வாகனச் சுமை வரம்பு மற்றும் மணிக்கு 30 கிமீ வேக வரம்பும் விதிக்கப்பட்டுள்ளது  எனத் தெரிவித்துள்ளார்.

“சாலையைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வழிகாட்டி பலகைகளுக்குக் கீழ்ப்படிந்து சாலையில் கவனமாகப் பயனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து அதிக நீர் பெருக்கத்தால், மார்ச் 1 அன்று அவ்விடம் இடிந்து விழுந்தது. அதனால், சாலை மூடப்பட்ட பின்னர் சுமார் 12,000 உள்ளூர்வாசிகள் நகரத்திற்குச் செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்த சாலை ஃபெல்டா செலாஞ்சாரில் வசிப்பவர்களைச் செகாமாட் மற்றும் முயாட்ஸாம் ஷாவுடன் இணைக்கிறது.

– பெர்னாமா


Pengarang :