NATIONAL

நில விவகாரங்களுக்குத் தீர்வு காண உதவும் கலந்தாய்வு நிகழ்வு- தொழிற்சங்கம் கருத்து

ஷா ஆலம், மார்ச் 8- சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிமவள இயக்குநர் மற்றும் சிலாங்கூர் துணை நில அதிகாரிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற டவுன்ஹால் எனப்படும் கருத்துப் பகிர்வு நிகழ்வு பிரச்சனைகளுக்குச் சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்குரிய ஒரு தளமாக விளங்கியது.

இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த வருடாந்திர நிகழ்வு கருத்துகளைப் பரிமாற்றம் செய்யும் அதேவேளையில் உறுப்பினர்களுக்கிடையே ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்ததாகச் சிலாங்கூர் மாநில துணை நில அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் முகமது ஜூவாஹிர் வாண்டி கூறினார்.

சிலாங்கூரில் நில மேலாண்மைப் பணிகளைப் மேற்கொள்வதில் உயிர்நாடியாக விளங்கும் துணை நில அதிகாரிகள் தங்களின் மனக்குறைகளை வெளியிடுவதற்கும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி, உயர்நிலையிலான அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடக் கூடிய ஒரு தளமாகவும் இந்த கருத்துப் பகிர்வுக் கூட்டம் அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்துப் பகிர்வுக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் டாக்டர் யூஸ்ரி ஜக்காரியாவும் கலந்து கொண்டார்.


Pengarang :