SELANGOR

வருவாய் இல்லாத நீர் (NRW) விகிதத்தை 2030க்குள் 23.5 சதவீதமாகக் குறைக்க எண்ணம்

ஷா ஆலம், மார்ச் 8: பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் வருவாய் இல்லாத நீர் (NRW) விகிதத்தை 2030க்குள் 23.5 சதவீதமாக குறைக்கத் தீர்மானித்துள்ளது.

பிரதான குழாய் மற்றும் வடிகால் அமைப்பில் உள்ள கசிவைக் கண்டறிந்து திறமையாகப் பழுதுபார்க்கும்  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என அதன் செயல்முறை இயக்குனர் கூறினார்.

கெல்வின் சியூவின் கூற்றுப்படி, புகார் அமைப்பின் மேலாண்மை, பழைய குழாய்கள் போன்ற கருவிகளை மாற்றுதல் மற்றும் மின்காந்த ஸ்மார்ட் மீட்டர்களைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

“சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்வதற்கும் தரப்படுத்தும் திட்டத்தை மேற்கொள்வதற்கும் நாங்கள் உலகத் தரம் வாய்ந்த பயன்பாட்டு நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறுவோம். இதனால் ஆயர் சிலாங்கூர் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் வெளிநாடுகளில் உள்ள பிற பயன்பாடுகளுடன், குறிப்பாக வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில்,  அழைப்பு மையத்தை அல்லது ஆயர் சிலாங்கூர் செயலி மூலம் ஏதேனும் கசிவுகள் இருந்தால் புகார் அளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கெல்வின் வரவேற்கிறார்.

இதுவரை, வருவாய் இல்லாத நீர் விகிதத்தை 5.5 சதவீதம் குறைக்க முடிந்தது என அந்நிறுவனம் தெரிவித்தது.


Pengarang :