NATIONAL

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்து வருகிறது

போர்ட்டிக்சன், மார்ச் 8: விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (கேபிகேஎம்) தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை துறையின் குறிப்பாக ஜொகூரில் ஏற்பட்ட சேதம் மற்றும் மொத்த இழப்புகளை மதிப்பீடு செய்து வருகிறது.

அதன் துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின், மதிப்பீட்டு செயல்முறைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் உரிய உதவிகள் பெறுவதை உறுதி செய்வதாகக் கூறினார்.

“தற்போது, அமைச்சகம் (கேபிகேஎம்) பல்வேறு ஏஜென்சிகள் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பெற்று கொண்டிருக்கிறது. எண்ணிக்கையைக் கண்டறிந்தால் தான் எவ்வளவு இழப்பீடு வழங்க இயலும் என்பதை தீர்மானிக்க முடியும் என்றார்.

“இதுவரை உண்மையான இழப்பு எவ்வளவு என்று அறியப்படவில்லை. மேலும், வெள்ளமும் இன்னும் முழுமையாகக் குறையவில்லை.

விரிவான தகவல்களைப் பெறும் வரை நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது,” என்றார் அவர்.

– பெர்னாமா


Pengarang :