SELANGOR

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பெண் வருகையாளர்களுக்கு 70 ரோஜா மலர்கள் வழங்கப்பட்டன – உலு கிளாங் தொகுதி

அம்பாங் ஜெயா, மார்ச் 11: உலு கிளாங் தொகுதியில் நேற்று நடைபெற்ற மலிவு விற்பனையில் மொத்தம் 70 வருகையாளர்களுக்கு ரோஜா மலர்கள் வழங்கப்பட்டன.

கவுன்சிலர் அன்வால் சாரி கூறுகையில், சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்களை  நினைவு கொள்ளவும், பாராட்டவும், இத் தொகுதி இந்த பரிசை வழங்கியது என்றார்.

“பெண்களின் அன்பு“ என்ற கருப்பொருளின்படி, பெண் வருகையாளர்களுக்கு 70 ரோஜா மலர்கள், பாராட்டு மற்றும் அவர்களின் சேவையை நினைவுகொள்ளும் அடையாளமாக வழங்கப்பட்டன,” என்றார்.

72 வயதான ஜோஸ்பின் சாமி, மகளிர் தினத்திற்காக ரோஜாக்களை வழங்கியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

“எனக்கு ஒரு ரோஜா மட்டுமே கிடைத்தாலும், நான் மிகவும் பாராட்டப் பட்டதாக உணர்கிறேன். பெண்களை மகிழ்விக்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தொகுதிக்கு நன்றி” என்று அவர் கூறினார்.

50 வயதான சித்தி ஹஜர் பக்தியார் என்ற இல்லத்தரசி, பெண்களை மதிக்கும் உலு கிளாங் தொகுதியைப் பாராட்டினார்.

“இந்த திட்டம் பெண்களை மதிக்கவும் பாராட்டவும் சமூகத்திற்கு மறைமுகமாக கற்பிக்க முடியும்.

“சில நேரங்களில் அவர்கள் கவனிக்கப்படாமல் இருந்தாலும், குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்களின் பங்கு மற்றும் தியாகம் மிகப்பெரியது,” என்று அவர் கூறினார்.

குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


Pengarang :