SELANGOR

தேசிய நில கட்டமைப்பு தினத்தைக் கொண்டாட பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர் – பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், மார்ச் 11: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) மார்ச் 19 அன்று பெட்டாலிங் ஜெயா வில் உள்ள தாமான் அமான், செக்‌ஷன் 22 இல் தேசிய நில கட்டமைப்பு  தினத்தைக் கொண்டாட பொதுமக்களை அழைக்கிறது.

அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் யூனிட், காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினர் வருகையாளர்களுக்கும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

“புதையல் வேட்டை, ஜூம்பா, பிராணிகள் பூங்கா, குதிரை சவாரி மற்றும் இலவசச் சுகாதாரப் பரிசோதனை ஆகியவை இந்நிகழ்வில் இடம்பெறும்.

“கண்காட்சிகளை காண்பதுடன், விற்பனைக் கூடங்களில் விற்கப்படும் பல்வேறு பொருட்களையும் மக்கள் வாங்குவதற்கு வாய்ப்பும் உள்ளது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் தகவல்களுக்கு 03-7804 8907 அல்லது 03-7804 8908 (அலுவலக நேரம்) என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தேசிய நிலக்கடமைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 அன்று கொண்டாடப்படுகிறது.

கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் நிலை கட்டமைப்பின்  தரத்தை மேம்படுத்துவது, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அனைத்து தரப்பினரிடையே ஆர்வத்தையும் அறிவையும் ஊட்டுவதாகும்.

தேசிய நில கட்டமைப்பு தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


Pengarang :