NATIONAL

மலேசியப் பூப்பந்து பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 11: மலேசியப் பூப்பந்து பெண்கள் இரட்டையர் பிரிவின் சாம்பியன் பேர்லி டான்-எம்.தினா, முல்ஹெய்மில் நடந்த ஜெர்மன் ஓபன் 2023 போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இன்று காலை (ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை இரவு) நடந்த சூப்பர் 300 போட்டியின் காலிறுதி சுற்றில் உலகின் ஆறாவது தரவரிசை ஜோடியான இவர்கள்   ஜப்பானின் மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாரா ஜோடியை 21-17, 18-21, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.

இதன் விளைவாக 2022 காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியன் ஆன இவர்கள் உலக தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஜப்பானிய ஜோடியான நமி மாட்சுயாமா-சிஹாரு ஷிடாவுடன் இன்று இரவு களமிறங்குவர், இது மலேசிய நேரப்படி இன்று நள்ளிரவு 12.00மணிக்கு நடைபெறும்.

முந்தைய சந்திப்பு பதிவுகளின் படி, போட்டியின் மூன்றாம் நிலையில் இருந்த பேர்லி-தினா, 2022 பிரெஞ்ச் ஓபனில் நமி-சிஹாருவை ஒருமுறை மட்டுமே தோற்கடித்துள்ளனர், அதற்கு முன் உலகின் இரண்டாவது தரவரிசையில் உள்ள அந்த இரட்டையர்களிடம்  ஏழு முறை தோல்வியடைந்துள்ளனர்.

இதற்கிடையில், நாட்டின் கலப்பு இரட்டையர், சென் தாங் ஜி-தோ ஈ வெய் ஜோடி, உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் கிம் வோன் ஹோ-ஜியோங் நா யூன் ஜோடியிடம் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.

– பெர்னாமா


Pengarang :