Orang ramai memenuhi gerai-gerai untuk membeli juadah berbuka puasa di bazar Ramadan PKNS, Shah Alam pada 3 April 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
NATIONAL

ரம்டான் பஜாரில் உணவு வியாபாரிகள் முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்படும். 

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13: மாநிலத்தின் ரம்டான் பஜாரில் உணவு வியாபாரிகள் சுகாதார நடவடிக்கையாக முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவரி அணிவது காற்றினால் ஏற்படும் பிற தொற்று நோய்கள் உட்பட கோவிட்-19 பரவுவதைத் தடுக்கலாம் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“உணவு கையாள்பவர்கள் முகக்கவரி அணிய வேண்டும் என்று ஒரு விதியை அமைத்துள்ளோம், ஏனெனில் அது நோய் பாதுகாப்பு அம்சம் ஆகும்,” என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட அளவிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தைத் தொடங்கி வைத்து பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடு முழுவதும் உள்ள ரமடான் பஜார்களில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், (SOP) சுகாதார அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில சுகாதாரத் துறைகளால் கண்காணிக்கப்படும் என்றும் அமிருடின் நம்புகிறார்.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், சிலாங்கூரில் உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள் உணவுக் கையாள்வதில் தூய்மையின் அளவை மேம்படுத்துவதற்காக முகக்கவரிகள் அணிய வேண்டும் என்ற உத்தரவை மாநில அரசு அமல்படுத்தியது.

இந்த அணுகுமுறை கோவிட்-19 மற்றும் உணவு நச்சுப் பிரச்சனைகளின் பரவலைத் தவிர்ப்பதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.


Pengarang :