SELANGOR

ஷா ஆலம் செக்சன் 27 (2)லுள்ள தேசியப் பள்ளிக்கு  RM10,000 நிதியுதவியை மாநில அரசு  வழங்கியது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ ஷா ஆலம் செக்சன் 27 (2)லுள்ள தேசியப் பள்ளிக்கு  RM10,000 நிதியுதவியை மாநில அரசு  வழங்கியது.  பள்ளியின் உள்கட்டமைப்பைப் பழுதுபார்க்க  இந்த  நிதி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா தேசா மெந்தாரி திடலில் நேற்று  நடைபெற்ற  ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் இந்த நன்கொடையை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அப்பள்ளியின்  துணை தலைமை ஆசிரியர்  தல்ஹா மிஸ்னிடம்  வழங்கினார்.

நிதியை பெற்றுக்கொண்ட தல்ஹா மிஸ்னோன் அந்த,  நன்கொடை  வழங்கியதற்குச் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

“பழுதடைந்து அடிக்கடி நீர் கசிவு ஏற்படும் நீர் பம்பை சரி செய்வதற்கான செலவை ஈடுசெய்ய  இந்த உதவி உதவும் என்றார்.

“இது உதவியால் எல்லாவற்றையும் முழுமையாகச் சரி செய்ய முடியாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் பள்ளியின் சுமையைக் குறைக்கலாம். அதனால், மாநில அரசுக்கும், டத்தோ மந்திரி புசார் அவர்களுக்கும் நன்றி,” என்றார்.

தல்ஹாவின் கூற்றுப்படி, மாநில அரசு குறிப்பாகக் கல்வி மற்றும் நலன் சார்ந்த அம்சங்களில் மக்களை ஒதுக்கி வைக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

“இந்த உதவிக்கான விண்ணப்பம் எளிதானது மற்றும் குறுகிய காலம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். மாணவர்கள் மற்றும் பள்ளியின் வசதிக்காக இந்த நிதியைச் சிறந்த முறையில் பயன்படுத்துவோம்,” என்றார்.

அப்பள்ளியில் 1,050க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர்.


Pengarang :