NATIONAL

18 வயது நிரம்பிய நலன்புரி இல்லத்தில்(சமூக நலன் காப்பகங்களில்) வசிப்பவர்களுக்கு இலவசமாகத் திறன் கல்வி கற்க வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 13: 18 வயது நிரம்பிய நலன்புரி இல்லத்தில் (சமூக நலன் காப்பகங்களில்) வசிப்பவர்களும் மாநில அரசால் இலவசமாக நடத்தப்படும் ஆறு மாதத் திறன் கல்வி திட்டங்களில்  இணைந்து கற்க வாய்ப்பு உள்ளது.

அந்த பிள்ளைகள், நலன்புரி இல்லத்தை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களின் வாழ்க்கையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ள இந்தத் திட்டம் அவசியம் என்றார் மனித மூலதன மேம்பாட்டு எஸ்கோ.

“அவர்களில் பலர் தங்குமிடத்தை விட்டு வெளியேறிய பிறகு எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

“அதன் காரணமாக, சிலாங்கூர் மாநிலத் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்துடன் (STDC) ஒரு சந்திப்பின் மூலம், அவர்கள் அனைவரும் அங்கு தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்வதை நாங்கள் கட்டாயமாக்கினோம்.

” எனவே ஆறு மாதக் காலப் படிப்பை முடித்த பிறகு அவர்கள் வேலை தேடலாம்” என்று முகமட் கைருடின் ஒத்மான் கூறினார்.

“கோலா சிலாங்கூர் எஸ்டிடிசி வளாகத்தில் குறுகிய காலத் திறன் கல்வியைக் கற்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் திறக்கப் பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

எஸ்டிடிசி வழங்கும் திறன் திட்டங்களில் ஆட்டோமோட்டிவ், ஸ்ப்ரே பெயிண்ட், மின்சாரம், ஃபேஷன், ஸ்பா தெரபி, சமையல், ஏர் கண்டிஷனிங் மற்றும் பேஸ்ட்ரி ஆகியவை அடங்கும் என்று கைருடின் தெரிவித்தார்.


Pengarang :