NATIONAL

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றிக் காத்து மற்ற மதங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் மாநில அரசுக்குச் சுல்தான் பாராட்டு

ஷா ஆலம், மார்ச் 13- இவ்வாண்டில் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி நிதியை ஒதுக்கிடு செய்ததன் மூலம் இஸ்லாத்தின் மாண்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் பாராட்டு தெரிவித்தார்.

சிலாங்கூரில் இஸ்லாத்தின் மாண்மைப் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

அதேசமயம், மற்ற மதங்களின் வளர்ச்சிக்காகப் பிரத்தியேகமாக நிதி ஒதுக்கீடு செய்து வரும் மாநில அரசுக்குத் தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

இன்று மாநில அரசுத் தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் 14வது சட்டமன்றத்தின் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் மற்ற மதங்களும் பாதுகாக்கப்படுகின்றன. கடந்தாண்டில் 63 லட்சம் வெள்ளியாக இருந்த சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமய சிறப்பு செயல்குழுவுக்கான (லீமாஸ்) மானியத்தை இவ்வாண்டு 80 லட்சம் வெள்ளியாக உயர்த்திய மாநில அரசின் நடவடிக்கையைத் தாம் பெரிதும் வரவேற்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :