NATIONAL

புதிய பொது மருத்துவமனைகள் திறக்கப்படுவது நோயாளிகளின் நெரிசலைக் குறைக்கும் – சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலம், மார்ச் 13: மாநிலத்தில் பல புதிய பொது மருத்துவமனைகள் திறக்கப்படுவது நோயாளிகளின் நெரிசலைக் குறைக்கும் என்று சிலாங்கூர் மாட்சிமை மிக்க சுல்தான் நம்புகிறார்.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  கூறுகையில், மருத்துவமனை திறப்பு மக்களுக்கு சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அளித்துள்ளது.

மார்ச் 9 அன்று, 12.8 ஏக்கர் பரப்பளவில் RM508.8 மில்லியன் ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட சைபர் ஜெயா மருத்துவமனையைச் சுல்தான் ஷராபுடின் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

16.1 ஹெக்டேர் நிலப்பரப்பில் 269 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி செயல்படத் தொடங்கிய தஞ்சோங் காராங் மருத்துவமனையையும் பிப்ரவரி 9ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு பொது சுகாதாரத் துறைக்கு RM65.6 மில்லியன் ஒதுக்கீடு செய்த மாநில அரசின் நடவடிக்கையையும் அவர் வரவேற்றார்.

“அவரின் கவனத்தை ஈர்த்த திட்டங்களில் சாரிங் சிலாங்கூரும் ஒன்றாகும். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிய மக்களுக்கு உதவுவதற்காக இந்த இலவசச் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :