NATIONAL

கம்போடியா 2023 சீ போட்டி- மலேசியா சார்பில் 677 விளையாட்டாளர்கள் பங்கேற்பு

புத்ராஜெயா, மார்ச் 14- இவ்வாண்டு மே மாதம் 5 முதல் 17 வரை கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நடைபெவிருக்கும் 32வது சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா சார்பில் 677 விளையாட்டாளர்களும் 237 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இவர்களில் 403 விளையாட்டாளர்கள் ஆண்கள் என்றும் எஞ்சிய 274 பேர் பெண் விளையாட்டாளர்கள் என்றும் மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது நோர்ஸா ஜக்காரியா கூறினார்.

இப்போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களில் 390 பேர் ஏ பிரிவைச் (முழு செலவு ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்) சேர்ந்தவர்கள் என்றும் 287 பேர் பி பிரிவினர் (பதக்கம் வென்றால் மட்டுமே செலவுகளை சங்கம் ஏற்றுக் கொள்ளும்) என்றும் அவர் சொன்னார்.

தடகளப் போட்டியில்தான் மிக அதிகமாக அதாவது 65 போட்டியாளர்கள் (ஏ பிரிவில் 34 பேர், பி பிரிவில் 31 பேர்) இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வரும் 2025இல் தாய்லாந்திலும் 2027இல் மலேசியாவிலும் நடைபெறும் சீ போட்டிகளுக்கு இளம் மற்றும் அடுத்தக் கட்ட தலைமுறை விளையாட்டாளர்களைத் தயார் படுத்தும் நோக்கில் இம்முறை அதிகமான போட்டியாளர்களுக்கு இந்த சீ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை
வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஆசியப் போட்டி, ஓலிம்பிக் போட்டிகளுக்கான முன்னோட்டக் களமாக விளங்கும் இந்த சீ போட்டியில் பங்கேற்பதற்குக் கிடைத்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமப்டி விளையாட்டாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

குழு போட்டிகளில்தான் அதிகமானப் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். கால்பந்து போட்டியில் 40 பேர் பங்கேற்கும் வேளையில் அதற்கு அடுத்த நிலையில் ஹாக்கி (60 பேர்), பூப்பந்து (20 பேர்), தரைப்பந்து (40 பேர்) உள்ளனர் என்றார் அவர்.


Pengarang :