SELANGOR

குறைந்த குடும்ப வருமானம் கொண்ட மாணவர்களுக்கு கார் சோம் கல்வி நிதியுதவியை அறிவித்துள்ளது

ஷா ஆலம், 13 மார்ச் 2023 – சிலாங்கூர் அரசாங்கத்துடன் இணைந்து கார்சோம் கல்வி நிறுவனம் அதன் மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலப் பொது போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் புதிய கிராம மேம்பாட்டிற்கான எஸ்கோ இங் ஸீ ஹான் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களைப் பிரதிநிதித்து கார்சோம் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்காக வழங்கப்படும் TVET சிலாங்கூர் கல்வி நிதியுதவியை 2023யை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இந்நிகழ்வு கார்சோம் சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்தில் நடைபெற்றது.

இக்கல்வி நிதியுதவி 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சிலாங்கூரில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்பவர்களும் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் சராசரி மாத வருமானம் RM 4,000க்கு உட்பட்டும், விண்ணப்பதார் வேலையின்றி,  நிலையான வருமானம் இல்லாதவராக இருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்கான கார்சோம் கல்வி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 தகுதியான மாணவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.

2023ஆம் ஆண்டிற்கான இந்த கல்வி நிதியுதவி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் புதிதாகப் பதிந்து உள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஈடுக்கட்ட உதவும்.


Pengarang :