NATIONAL

அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்பட்ட பொட்டலம் பறிமுதல்

புத்ராஜெயா, மார்ச் 14:  இங்கு  பூலாவ் மெராந்தி  என்னுமிடத்தில் உள்ள கூரியர் நிறுவனத்திடமிருந்து , இரண்டு அரசியல்வாதிகளுக்கு அனுப்பிய பொட்டலத்தில் உள்ள பற்பசையில் கஞ்சா இலை சாறு இருக்கக் கூடும் எனும் சந்தேகத்தில் சிப்பாங் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை அப்பொருளைக் கைப்பற்றினர்.

இரண்டு அரசியல்வாதிகளின் பெயரில் ஒரு பொட்டலம் இருப்பதாக அரசு அலுவலக அதிகாரியிடம் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து அப் பொட்டலம் பறிமுதல் செய்ய பட்டதாகச் சிப்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

“கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்த பொட்டலத்தில் தடைசெய்யப் பட்ட பொருட்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப் படுவதாகவும், கடந்த வாரம் அரசாங்க அலுவலகத்துக்கும் கஞ்சா இலைகள் அடங்கிய பொட்டலம் வந்துள்ளதாகவும் அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கூரியர் ஹப்பிற்கு சென்ற காவல்துறையினர், பிரவுன் பாக்ஸ் பொட்டலத்தில் இருந்த கஞ்சா இலை வடிவில் ஹேப்பி கிரீன் என எழுதப்பட்ட பற்பசையைப் பறிமுதல் செய்தனர். .

இந்தோனேசியாவில் உள்ள முகவரியுடன் ஷோபி பிளாட்பார்ம் மூலம் இப்பொருளை வாங்கியது சோதனை   நடவடிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டது.

“கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கும் அந்த முகவரிக்கும் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் விசாரணை தொடர்கிறது,” என்றார்.

– பெர்னாமா


Pengarang :