SELANGOR

முதியவர்கள் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை எளிதாகப் பெற்று கொள்ள நடமாடும் கவுண்டர் ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 14: முதியவர்கள் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை எளிதாகப் பெறுவதற்காகப் புக்கிட் காசிங் தொகுதியின் சமூகச் சேவை மையம் மார்ச் 18 மற்றும் 25ம் தேதிகளில் நடமாடும் கவுண்டர்களை அமைக்கும்.

இன்னும் RM150 மதிப்புமிக்க ஜோம் ஷாப்பிங் வவுச்சரைப் பெற்று கொள்ளாத ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தின் (SMUE) 2,099 உறுப்பினர்கள் மார்ச் 18 அன்று கேபின் ரெசிடென்ட் அசோசியேஷன் மற்றும்  மார்ச் 25 அன்று சூராவ், பிளாட் காசிங் இண்டாவிற்கு வருகைப் புரியலாம் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர்  ஆர். ராஜீவ் தெரிவித்தார்.

“கடந்த பிப்ரவரி முதல், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3,757 மூத்தக் குடிமக்களில் மொத்தம் 1,658 பேர் மட்டுமே RM150 வவுச்சரைப் பெற்றுக் கொண்டனர்.

“இதுவரை வவுச்சர்களை எடுக்காத மீதமுள்ள 2,099 முதியவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் வசதியைப் பயன்படுத்தி அவற்றை பெற்றுக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் கூறினார்,

ராஜீவ் இந்த ஆண்டு ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்திற்கு 1,200 புதிய விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், அவை அனைத்தும் மாநில அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற செயலாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Pengarang :