NATIONAL

இன்று நாடாளுமன்றத்தில் குழந்தைகள் நலன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன

கோலாலம்பூர், மார்ச் 15: இன்று நாடாளுமன்றத்தில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சிடம் (KPWKM) குழந்தைகள் நலன் குறித்த பல கேள்விகள்  எழுப்பப்பட்டன.

குழந்தைகளைக், குறிப்பாக துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒப்புதல் தேவைகளை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யுமா என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்க உள்ளார்.

துஷ்பிரயோக வழக்குகளில் ஈடுபடும் குழந்தைகளை அவர்களது உறவினர்களுடன் அனுப்புவதற்கு முன், அவர்கள் நீண்ட காலம் குழந்தைகள் இல்லத்தில் வைக்கப் படுவார்களா என்றும் முன்னாள் பிரதமர் கேட்டார்.

ஜெர்லுன் உறுப்பினர் டாக்டர் அப்துல்லா கஹனி அமாட், நாடு முழுவதும் தவறான உறவால் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பராமரிப்பு மையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அறிய விரும்பினார்.

கூடுதலாக, டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிறப்புத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் மீது கவனம் செலுத்த படுவதையும் அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதையும் உறுதி செய்வதற்கான கல்வி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

– பெர்னாமா


Pengarang :