SELANGOR

உலு லங்காட்டைச் சுற்றியுள்ள 13 இடங்களில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்ட  அனுமதியளித்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் 7A வழங்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 15: கடந்த ஆண்டு உலு லங்காட்டைச் சுற்றியுள்ள 13 இடங்களில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்ட  அனுமதியளித்த உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு ஐந்து இடங்களில் நோட்டீஸ்  7A,  நிபந்தனைகளை மீறியதற்காக வழங்கப்பட்டது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், நில அலுவலகம் மற்றும் உலு லங்காட் மாவட்டத்தின் பதிவுகளின் அடிப்படையில் அனைத்து இடங்களும் தனி நபர்களுக்கு சொந்தமான நிலம் என தெரிவித்தார்.

“சட்டவிரோதக் குப்பை கிடங்காக பயன்படுத்தப்படும் அனைத்து இடங்களுக்கும் 7A அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலத்தை அபகரிப்பதற்கான 8ஏ அறிவிப்பு வெளியிடுவதற்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படும்,” என்றார்.

இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டசபையில் உலு லங்காட்டில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நில எண்ணிக்கை குறித்து டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினரின்  கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மேலும் மூன்று இடங்களுக்கும் 7A அறிவிப்புகளை வெளியிடுவதற்கு  தனது தரப்பு உரிமையாளர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை  ஃபெல்க்ரா செமுங்கிஸ் 14 வது மைல், கம்போங் சிம்பாங் பாலக் மற்றும் ஜாலான் குவாரி சுங்கை லோங் ஆகியவை என அமிருடின் மேலும் கூறினார்.

“உரிமையாளரை அடையாளம் காண்பது மற்றும் அரசு நில ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கை பலகைகள் நிறுவுவது, உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர்  கூறினார்.


Pengarang :