SELANGOR

வரம்புக்கு மீறி கடைகளைத் திறந்ததால் உணவு வளாகம் ஒன்றிற்கு அபராதம் விதிக்கப்பட்டது

சுபாங் ஜெயா, மார்ச் 15: சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) புன்சாக் ஜலீல் PUJ 3/1 – PUJ 3/7, ஸ்ரீ கெம்பாங்கன் வணிகப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்று வளாகத்திற்குள் வரம்புக்கு மீறி அதிக அளவில் கடைகளைத் திறந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

சுபாங் ஜெயா மாநகராட்சி அமலாக்க உதவி இயக்குனர் முஹமாட் இஸ்கண்டார் இசட் ஆஸ்மி கூறுகையில், இந்த உணவு வளாகம் 15 கடைகள் வரை திறந்ததன் மூலம் குற்றத்தைப் புரிந்துள்ளது.

“உணவு வளாக உரிமத்தின் சிறப்பு நிபந்தனைகளின்படி,ஒரு உணவு வளாகம் இரண்டு கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப் படுகிறது. மேலும் ஒரு வரிசையில் உள்ள இறுதி உணவக வளாகமாக இருந்தால் ஐந்து கடைகள் வரை திறக்கலாம்.

“கடைகளை நடைபாதையில் வைப்பதற்கு முன் மேசை நாற்காலி அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு அதன் உரிமையாளர்களை நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் இங்குள்ள தாமான் புன்சாக் ஜலீலில் உள்ள வணிக மையத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்குப் பிறகு கூறினார்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் RM1,000 வரை அபராதம் விதிக்கலாம். அந்த வளாகத்தின் உரிமையாளர் அதை மீறினால், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :