SELANGOR

சிலாங்கூர் கடந்த ஆண்டு உற்பத்தித் துறையில் இருந்து RM1220  கோடி முதலீட்டை பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 16: சிலாங்கூர் கடந்த ஆண்டு 265 உற்பத்தித் துறை முதலீட்டுத் திட்டங்கள் வழி 1220  கோடி வெள்ளியை ஈர்த்துள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எம்ஐடிஏ) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தரவுகள் இருப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். “இந்த முதலீடு, நாட்டின் முக்கிய முதலீட்டு இடங்களில் ஒன்றாக, முதலீட்டாளர்கள்  சிலாங்கூரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது  நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

“இது பொருளாதாரத்தை உருவாக்கும் மற்றும் பல வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு சிலாங்கூரில் உற்பத்தித் துறை மற்றும் தொழில்துறை சூழல் அமைப்பை மேம்படுத்தும்,” என்று அவர் கூறினார்.  தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதித் திட்டத்தை (IDRISS) இன்று துவக்கி வைத்து உரையாற்றிய அமிருடின், மாநிலத்தின் வருவாய் சேகரிப்பு என்பது மெகா முதலீடுகளை மட்டும் சார்ந்தது அல்ல என்பதை தரவுகள் நிரூபித்துள்ளன என்றார்.

“2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இலக்கை விட அதிக முதலீட்டை பதிவு செய்துள்ளோம் என்பதை சிலாங்கூர் நிரூபித்துள்ளது.  RM1700 கோடி  முதல் RM1900 கோடி வரை உள்ளதைத் தக்க வைத்துக் கொள்ள சிறந்த. நிர்வாகத்துடன் நமது மேம்படுத்தும் திறனையும் நிரூபிப்பதாக  இது விளங்குகிறது,” என்றார்  அவர்


Pengarang :