NATIONAL

நோயாளிகள் வீடுகளுக்கு அருகில் உள்ள கிளினிக்குகளில் சிகிச்சை பெற வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 16: காப்பார் பகுதியில் வசிக்கும் நோயாளிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப வீட்டிற்கு அருகில் உள்ள சுகாதார மையங்களில் சிகிச்சை பெறலாம்.

மக்களுக்குச் சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் தான் உறுதியாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார். சுகாதாரக் கிளினிக்கில் சிகிச்சைப் பெற வரும் எவரையும் “தவறான காரணங்களை காட்டி அனுமதி மறுக்கும்’   அணுகுமுறை  வேண்டாம் என்று பதிவு கவுண்டரில் உள்ள சுகாதார உறுப்பினர்கள் நினைவூட்டப் படுகிறார்கள்.

“சுகாதாரக் கிளினிக் செயல்படும் பகுதிக்கு வெளியில் இருந்து வரும் நோயாளிகளை நிராகரிப்பதற்கு இது ஒரு காரணமாகப் பயன்படுத்த முடியாது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

டாக்டர் ஹலிமா அலி 14வது பொதுத் தேர்தல் தொகுதி மறுவரையறை க்குப் பிறகு தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கிளினிக்குகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப் படவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறியதைத் தொடர்ந்து அமைச்சகத்தின் நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.

நோயாளிகளை நிராகரிக்கும் சுகாதார நிலையங்கள் இன்னும் இருந்தால் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் ஜலிஹா கேட்டுக் கொண்டார்.


Pengarang :