SELANGOR

ஷா ஆலம் புகைப்படப் போட்டி 2023 வெற்றியாளருக்கு RM28,000 ரொக்கப் பரிசு

ஷா ஆலம், மார்ச் 16: ஷா ஆலம் 2023  புகைப்படப் போட்டி வெற்றியாளருக்குச்  சான்றிதழுடன் RM28,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) நடத்தும் வருடாந்திர போட்டி தொடங்கியது. இப்போட்டி இவ்வருடம் செப்டம்பர் 30 வரை நடைபெறும்.

ஷா ஆலம் மாநகராட்சியின் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறைத் தலைவர்,  இப்போட்டியில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், கட்டிடங்கள் அல்லது நினைவுச் சின்னங்கள், இயற்கை, வாழ்க்கை முறை மற்றும் இரவுக் காட்சிகள் என நான்கு வகைகளாக அப்போட்டி பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“பங்கேற்பாளர்கள் ஷா ஆலம் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், ஏரிகள், பூங்காக்கள் அல்லது இயற்கைக் காட்சிகள் போன்ற சுவாரஸ்யமான இடங்களை புகைப்படம் எடுக்க வேண்டும்.

“வெற்றியாளர்கள் கருப்பொருள், அசல் தன்மை, படைப்பாற்றல் மற்றும் சிறந்த புகைப்பட நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்க படுவார்கள்,” என்று ஷாரின் அஹ்மட் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்திற்கு RM3,000, இரண்டாவது இடத்திற்கு (RM2,000), மூன்றாம் இடத்திற்கு (RM1,000) மற்றும் ஐந்து வெற்றியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக (RM200) வழங்கப்படும்.

போட்டியில் பங்குபெற அதன் விண்ணப்ப பாரத்தை ஷா ஆலம் மாநகராட்சி போர்ட்டல் www.mbsa.gov.my இல் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது 16 வது  மாடி , கார்ப்பரேட் & மக்கள் தொடர்பு பிரிவு, விஸ்மா ஷா ஆலம் மாநகராட்சி செக்‌ஷன் 14 , ஷா ஆலம் எனும் இடத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

கூடுதல் தகவல்களுக்கு ஷா ஆலம் மாநகராட்சி கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவை 03-5510 5133 நீட்டிப்பு 1250 அல்லது 1431 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :