SELANGOR

பூனைப் பூங்கா கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது

சிப்பாங், மார்ச் 19: இங்கு தாமான் தாசிக் சைபர் ஜெயா வில் உள்ள பூனைப் பூங்கா கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொது மக்களுக்காகத் திறக்கப் பட்டுள்ளது.

சிப்பாங் மாநகராட்சி (எம்.பி.எஸ்.பாங்) தலைவர் டத்தோ அப்துல்லா ஹமீட் ஹுசைன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள தெருப் பூனைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்காக பூனை பூங்கா நிறுவப்பட்டது என்றார்.

“இந்த 0.3 ஏக்கர் அல்லது 1,000 சதுர அடி பூங்காவில் இதுவரை 31 பூனைகள் உள்ளன, மேலும் இது ஒரே நேரத்தில் 200 முதல் 300 பூனைகளுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

“எனவே, கார்ப்பரேட் துறை அல்லது எந்தவொரு தரப்பும் இந்த பூனை பூங்காவிற்கு பங்களித்து உதவுவதை சிப்பாங் மாநகராட்சி வரவேற்கிறது,” என்று அவர் கூறினார்.

நேற்று தாமான் தாசிக் சைபர் ஜெயாவில் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தலைமையில் நடைபெற்ற பூனைப் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பூனைப் பூங்கா பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய, பூனைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கால்நடை மருத்துவர்கள் குழுவை நியமிப்பது உட்பட பல உத்திகளை அவரது தரப்பு வகுத்துள்ளதாக அப்துல் ஹமிட் கூறினார்.

சிப்பாங் மாநகராட்சிக்கு இவ்விலங்கு தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து, விலங்கு  நலன் மற்றும் கருத்தடை  திட்டத்தையும்  நடத்தியதாகவும், விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்துடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :