SELANGOR

விபத்துகளைத் தவிர்க்க யூ.எஸ்.ஜே 3 ல் போக்குவரத்து விளக்குகளை நிறுவ வெள்ளி 141,215

சுபாங் ஜெயா, மார்ச் 19 : இங்கு USJ 3A, பெர்சியாரான் செத்தியா, சுபாங் ஜெயா சந்திப்பில் போக்குவரத்து விளக்குகளை நிறுவ மொத்தம் RM141,215 செலவிடப்பட்டது.

சுபாங் ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங், இந்த வசதி ஏற்பாடு செய்ய சுபாங் ஜெயா மாநகராட்சி ஒதுக்கீட்டை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார்.

“பல விபத்துகள் இங்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் இந்த போக்குவரத்து விளக்குகள் அமைப்பதற்கான ஏற்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த சுபாங் ஜெயா மாநகராட்சியை பாராட்டினார்.

“இந்த போக்குவரத்து விளக்கு அமைக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி பிப்ரவரியில் நிறைவடைந்தது. இதன் மூலம், விபத்துகள் குறைவதுடன், குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

நேற்று இங்குள்ள வசதியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மிஷல், 2019 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் போக்குவரத்து விளக்குகள் அமைப்பதற்கு விண்ணப்பித்து வருவதாகவும், ஆனால் கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து சில தடைகள் ஏற்பட்டதாக விளக்கினார்.

“அதிர்ஷ்டவசமாக இது இறுதியாக செயல் படுத்தப்பட்டது மற்றும் இதனால் சுமார் 335 குடும்பங்கள் பயனடைந்தனர். இந்த போக்குவரத்து விளக்குகள் இன்னும் புதிதாக இருப்பதால், இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வாகனம் ஓட்டும்போது அவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

இதற்கிடையில், USJ 3A குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்வர் ஜைஹான், போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டதால் அப்பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க முடியும், அதனால் தாங்கள் நிம்மதி அடைந்ததாக கூறினார்.

“இரண்டு வருடத்தில் சுமார் 10 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன மற்றும் கடந்த ஆண்டு ஒரு சம்பவம் உயிரைப் பறித்தது. எங்கள் கோரிக்கை கேட்டதற்காக மிஷல் அவர்களுக்கு நன்றி,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக போக்குவரத்து விளக்குகள் இல்லை என்றும், அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.

“இங்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து விளக்குகள் அமைப்பது மிகவும் அவசியம். மக்கள் இதைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், “என அவர் கூறினார்.


Pengarang :