NATIONAL

50,000 மடிக்கணினிகளை விநியோகிக்க எண்ணம் – கல்வி அமைச்சகம்

கோத்தா பாரு, மார்ச் 19: இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் டிஜிட்டல் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தி கல்வி கற்கும் நோக்கத்திற்காக 50,000 மடிக்கணினிகளை விநியோகிக்கும் பணியில் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) ஈடுப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் அவற்றைப் பெறும் வகையில் விநியோகிக்க பொருத்தமான சூத்திரத்தைத் தனது தரப்பு ஆலோசித்து வருவதாக அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ பகாருடின் கசாலி கூறினார்.

“இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 50,000 மடிக்கணினிகளை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “எனவே, நாங்கள் விநியோக செயல்முறையில் உள்ளோம், மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்படுவதற்கு முன்பு கொள்முதல்  செய்யப்படும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குரூப் ஏ மாநிலங்களான ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் உள்ள 3,044 பள்ளிகளை உள்ளடக்கிய மொத்தம் 1.53 மில்லியன் மாணவர்கள் இன்று தங்கள் பள்ளி அமர்வைத் தொடங்கினர்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த டிஜிட்டல் பாடப்புத்தகங்கள் பயன்பாடு இணையக் கணினி அல்லது மடிக்கணினி உபகரணங்களுடன்  மேற்கொள்ள வேண்டும். இது 2021 இல் அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து மாணவர் பயன்பாட்டிற்காக 70 சதவீதத்திற்கும் அதிகமான டிஜிட்டல் பாடப் புத்தகங்களை உருவாக்கியுள்ளது.

“நாங்கள் டிஜிட்டல் கல்விக் கொள்கையை அமல் படுத்துவதை நோக்கி நகர்கிறோம், அது அமைச்சரவை மட்டத்திற்குக் கொண்டு வரப்படும்.

“அங்கீகரிக்கப் பட்டால், எங்கள் திசை டிஜிட்டல் கல்வியை நோக்கியதாக இருக்கும், இதன் மூலம் மாணவர்கள் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் எளிய முறையில் கற்றல் வளங்களைப் பெற முடியும், அதே நேரத்தில் அவர்களின் புரிதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் அடுத்த ஆண்டு பள்ளி அமர்வுக்கான காலெண்டரை மாற்றுமா என்று கேட்டபோது, அதற்கு தனது தரப்பு இன்னும் உழைத்து வருவதாக பிகாருடின் கூறினார்.

“சில காரணிகளால் ஜனவரியில் கற்றல் சூழல் தொடங்க வேண்டும் என்று விரும்பும் சமூகம், பெற்றோர்கள் மற்றும் சில ஆசிரியர்களின் விருப்பங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், அதற்கு சிறிது காலம் ஆகலாம், என்றார்.

 – பெர்னாமா


Pengarang :