NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 20: பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதால் செகாமட் மாவட்டம் முழுமையாக மீட்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி மொத்தம் 15,907 பேர் 68 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.

“பத்து பஹாட்டில் உள்ள இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதால் மூடப்பட்டன என தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்தது.

பத்து பஹாட்டில் மொத்தம் மூன்று ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன, அதாவது சுங்கை பெக்கோக்கில் உள்ள பெக்கோக் அணை தற்போது 19.09 மீட்டர் (மீ) மட்டத்தில் உள்ளது. சுங்கை செம்ப்ராங்கில் உள்ள செம்ப்ராங் அணை 11.24 மீட்டர் அளவிலும், செங்கராங்கில் உள்ள சுங்கை செங்கராங் அணை 3.34 மீட்டர் அளவில் உள்ளன.

– பெர்னாமா


Pengarang :