NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, 10,396 பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பி.பி.எஸ் இல் உள்ளனர்.

ஜொகூர் பாரு, மார்ச் 20: பத்து பஹாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சாதகமான மேம்பாடு கண்டுள்ளது., இன்று காலை 8 மணி நிலவரப்படி, தற்காலிக  தங்கும் மையங்களில்  (பி.பி.எஸ்) தங்க  வைக்கப் பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு (ஜே.பி.பி.என்) நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட 59 பிபிஎஸில்  13,872 பேருடன் ஒப்பிடும்போது இப்பொழுது மொத்தம் 10,396 பேர் இன்னும் 51 இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

ஜே.பி.பி.என் கருத்துப்படி, செகோலா கெபாங்சான்ஸ்ரீ அமான்  (552), செகோலா ஜெனிஸ் கெபாங்சான் (சீன) (எஸ்.ஜே.கே.சி) லி சுன் (522) மற்றும் எஸ்.ஜே.கே.சி தோங்காங் (478) ஆகிய மூன்று இடங்கள் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.

சுங்கை பெக்கோக்கில் உள்ள பெக்கோக் அணை (19.06 மீட்டர்), சுங்கை செம்ப்ராங்கில் உள்ள செம்ப்ராங் அணை (11.17 மீ) மற்றும் செங்கராங்கில் உள்ள சுங்கை செங்கராங் (3.30 மீ) ஆகிய மூன்று ஆறுகள் இன்னும் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன.

எனினும் இன்று காலை 10 மாவட்டங்களிலும் வெயிலுடன் கூடிய வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :