NATIONAL

மருத்துவ நோக்கத்திற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது தொடர்பில் விரிவான ஆய்வு தேவை- பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 20- இந்நாட்டில் மருத்துவ நோக்கங்களுக்காகக் கஞ்சவைப் பயன்படுத்துவது தொடர்பில் விரிவான ஆய்வு மற்றும் விவாதம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

அந்த போதை வஸ்துவை கட்டுபடுத்துவது குறித்த அம்சங்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் போதைப் பொருளைப் பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து வருவதையும்
கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

பொறுமையுடன் இருங்கள், நாம் இதனை கவனமாக ஆராய வேண்டியுள்ளது. மருத்துவ நோக்கம் மற்றும் அவசியம் போன்ற வலுவான காரணங்களால் கஞ்சா பயன்பாட்டை நாம் சட்டப்பூர்வமாக்கி விட்டால் அதன் பின்னர் கட்டுப்படுத்துவது என்பது கடுமையானதாகிவிடும். இவ்விவகாரத்தில் எதிர்ப்புக் கருத்தை கொண்டிருக்கிறேன் என்ற கூறவில்லை.

இது குறித்து விரிவாக விவாதித்து அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்வோம்
என்றுதான் கூறுகிறேன் என்றார் அவர். கஞ்சா பயன்பாட்டை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களின் கருத்தைக் கேட்டறிந்து அதில் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாக்குவதா? முழுமையாக சட்டப்பூர்வமாக்குவதா? அல்லது நடப்பு நிலைப்பாட்டைத் தொடர்வதா?
என்று முடிவெடுப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அன்வாருடன் சந்திப்பு எனும் கலந்துரையாடல் நிகழ்வில் இடம் பெற்ற கேள்வி-பதில் அங்கத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :