NATIONAL

பள்ளி துவக்க முதல்  நாளில் இரண்டு மாணவர்கள்

தமிழ் பள்ளியே நமது தேர்வு. சமுதாயத்திற்கு தமிழ் பள்ளிகளின் அர்ப்பணிப்பும், தமிழ் மொழியை  காக்க   தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு சமுதாயத்தின் அற்பணிப்பும்  இன்றியமையாதது.

இன்று,  நாடுதழுவிய நிலையில் பள்ளிகள் திறக்கப் பட்டன. அதில்  தமிழ்ப் பள்ளிகளுக்கு விதிவிலக்கில்லை.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பெஸ்தாரி ஜெயா பட்டணத்தில் அமைந்துள்ள தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி,  95 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இப்பள்ளி நிறைய சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்  பள்ளியின் முதலாம் நாளான இன்று  மதிப்பிற்குரிய திரு :இஸ்ஜம்லி ஜய்லானி (கல்வி பிரிவு கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகம் அதிகாரி)  அவர்கள் சிறப்பு வருகையாளராக  வருகை புரிந்து பள்ளிக்கு சிறப்பு சேர்த்தார். அதோடு  அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி:  கிருஷ்ணவேணி  வேலாயுதம் அவர்களின் தலைமையில் 6 ஆசிரியர்களையும் 15 மாணவர்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது.  இப்பள்ளி 2018- ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பன்மை வகுப்பு எனும் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. சிறிய பள்ளியாக இருப்பினும் இப்பள்ளி அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

மாணவர்கள் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கையில் கலந்து பல சாதனைகளையும் புரிந்துள்ளனர். எனினும்  இவ்வாண்டு முதலாம் ஆண்டில் இரண்டு மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

நிறைய பிள்ளைகள்  இப்பள்ளியில் பயிலா விட்டாலும் இருக்கும் மாணவர்களை கொண்டு எங்களால் இப்பள்ளிக்கு பெருமை
சேர்க்க முடியும் என்றும்  அவர்களை  செயல்திறன், போட்டி ஆற்றல் மிக்கவர்களாக  உருவாக்க முடியும் என்று கூறி தமது உரையை  ஓர் நிறைவுக்கு கொண்டு வந்தார்  பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி கிருஷ்ணவேணி வேலாயுதம் அவர்கள்.


Pengarang :