NATIONAL

பிரதமர் அறிமுகப்படுத்திய மடாணி மலேசியா என்ற கருத்துமக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர உதவும்

புத்ராஜெயா, மார்ச் 20: பிரதமர் அறிமுகப்படுத்திய மடாணி மலேசியா என்ற கருத்து, அவர் பிரதமராக இருப்பதற்கான அரசியல் முழக்கம் மட்டுமல்ல. பல்வேறு சவால்களை கடந்து, பல இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றுபட்டு நட்பாக வாழ்வதுடன், நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து தரவும், அனைவரும் உறுதியோடு , உண்மையாக பாடுப்பட வலியுறுத்தும் கொள்கை என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“மடாணி நாடு என்ற கொள்கை பற்றி பொதுவாக பலர் நேர்மறை, எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளனர் “உண்மையில், இது பிரதமரின் தலைமைத்துவத்தின் வெளிப்பாடு என்று கூட சிலர் நினைக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மந்திரி புசார் அந்த கலந்துரையாடலில் , தற்போதைய சூழ்நிலை மற்றும் காலப்போக்கில் மாறிவரும் சூழலின் அடிப்படையில் மடாணி கருத்தை விளக்கினார்.

அதனை புரிந்துக்கொண்டு அதனை வாழ்வில் அமல்படுத்த கேட்டுக்கொண்டார் குறிப்பாக அரசாங்க அதிகாரிகளும், எல்லா அமலாக்க தரப்புகளும் இந்த கொள்கைகளை நாள்தோறும் தங்கள் பணியில் நடைமுறைப்படுத்த வேண்டும்

“நகர்ப்புற வளர்ச்சியின் பரிணாமம் மாறுகிறது மற்றும் திட்டமிடும் பணி கட்டிடங்களை மட்டும் உள்ளடக்கியது இல்லை. இயற்கை மற்றும் சுற்றியுள்ள சூழ்நிலைகளிலிருந்து உங்களைப் பிரித்துக் கொண்டால், நகரத் திட்டமிடலும் நிர்வாகமும் கடினமாகிவிடும் என்கிறார்

“அதனால்தான் மடாணி சமுதாயத்தில் நிலைத்தன்மை, வடிவமைப்பு சக்தி, மரியாதை, சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய வகையில் சமூக நல்வாழ்வு போன்ற ஆறு அம்சங்களைக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கு முன், பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் நட்புறவு கொண்ட மலேசியா மற்றும் அதன் மக்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதையாக மடாணியின் கருத்தை பிரதமர் அறிமுகப் படுத்தினார்.

ஜனவரி 19 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட மலேசிய மடாணியின் கருத்து நிலைத்தன்மை, புதுமை, படைப்பாற்றல், மரியாதை, நம்பிக்கை மற்றும் கருணை ஆகிய ஆறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும் என அவர் விளக்கினார்.


Pengarang :