NATIONAL

மேம்படுத்தும் சூழலில் உள்ள சாலைகளை அரசு அடையாளம் கண்டு வருகிறது

சபாக் பெர்ணம், 20 மார்ச்: சிலாங்கூர் அரசாங்கம் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மேம்படுத்தும் சூழலில் உள்ள சாலைகளை உள்ளூராட்சி மன்றங்கள் அடையாளம் கண்டு வருகிறது.

உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் எஸ்கோ  ஐஆர் இஷாம் ஹசிம், ரி.ம 50 மில்லியன் ஒதுக்கீட்டில் இந்த மாதம் முதல் பெரிய அளவில் சாலைகளை மேம்படுத்தும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

“நாங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளோம், நடைபாதை வேலைகளில் பயன்படுத்த வேண்டிய முறைகள் கூட தயார் நிலையில் உள்ளன. இனி செயல்படுத்துவது மட்டுமே எஞ்சியுள்ளது.

“இப்போது இறுதிச் செயல்முறையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சாலைகளை கண்டறிந்து வருகிறோம். கூடிய விரைவில் கூட்டத்தை நடத்துவது,” என்றார்.

ஜனவரி 16 ஆம் நாள் அன்று, டத்தோ மந்திரி புசார், மாநில நிர்வாகத்தின் கீழ் உள்ள சாலைகள் பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்தை உள்ளடக்கிய ஒரு மெகா சாலை மேம்பாட்டு திட்டத்தை அறிவித்தார்.

மந்திரி புசார் அவர்கள், பொதுமக்கள் தங்கள் இடங்களில் உள்ள சாலைகள் சேதம் ஏற்பட்டால் ட்விட்டர் செயலி மூலம் அவற்றின் புகைப்படங்களை அனுப்பி, புகார் அளிக்கலாம் என்று பொதுமக்களை ஊக்குவித்தார்.

இதற்கிடையில், இரண்டாம் கட்ட எல்.இ.டி தெரு விளக்குகள் நிறுவும் பணியும் இந்த மாதம் மேற்கொள்ளப்படும் என்று ஐஆர் இஷாம் கூறினார்.


Pengarang :