NATIONAL

3.27 விழுக்காட்டு கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன- சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், மார்ச் 21- இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலான
காலக்கட்டத்தில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைச்சின் சேமிப்பு
பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரகங்களை சேர்ந்த 27
லட்சத்து 96 ஆயிரத்து 638 கோவிட்-19 தடுப்பூசிகள்
காலாவதியாகவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெறப்பட்ட மொத்த
தடுப்பூசிகளில் இது 3.27 விழுக்காடாகும் என்ற நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள சுகாதார அமைச்சின் எழுத்துப்பூர்வ
பதிலில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மக்களவையில் தைப்பிங் உறுப்பினர் வோங் கா வூ எழுப்பிய கேள்விக்கு
அமைச்சு இந்த பதிலை வழங்கியுள்ளது. காலாவதியான கோவிட்-19
தடுப்பூசிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்பு குறித்து வோங்
கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :