NATIONAL

ஈ.பி.எஃப் சேமிப்பை வங்கி கடன் பிணையமாகப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஈ.பி.எஃப் சட்டத்திற்கு எதிரானது அல்ல  – பிரதமர் 

கோலாலம்பூர், மார்ச் 21 – ஊழியர் சேம நிதி சந்தாவை  (ஈ.பி.எஃப்) உறுப்பினர்கள் தங்கள்  வங்கிக் கடனுக்கான பிணையமாகப் பயன்படுத்த அனுமதி ஆனது, ஈ.பி.எஃப் சட்டப் பிரிவு  51 னை மீறவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் அவர்கள், இந்த விஷயத்தில் சட்ட ஆலோசனைக்காக அரசாங்கம் ஈ.பி.எஃப் மற்றும் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைகளை  பெற்றதாக  அவர் கூறினார்

வங்கிக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் இந்த முறை, ஈ.பி.எஃப் உறுப்பினர்களின் நலன்களை பாதிக்காது, ஏனெனில் அவர்கள் பிணையமாகப் பயன்படுத்தும் சேமிப்பிற்கு  லாப  ஈவுகளை  தொடர்ந்து பெறுவார்கள். “உதாரணமாக, ரி.ம 50,000 கடனுக்காக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அசல் தொகைக்கு ஏற்ப லாப  ஈவு  தொகை முழுமையாக வழங்கப்படும்.
அதனால் எந்தக் கழிவும் (லாபத் தொகை) இல்லை,” என்று அவர் இன்று  டேவான் ராக்யாட்டில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது (எம். க்யு. தி) கூறினார்.  சுங்கை  புசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யஹாயாவின்  இந்த திட்டம்  ஈ.பி.எஃப் சட்டத்தை மீறுமா என்றும், பிரதமர் இது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டாரா என்ற துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

– பெர்னாமா


Pengarang :