NATIONAL

பத்து பஹாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்து வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 21: பத்து பஹாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது 43 தற்காலிகத் தங்கும் மையங்களில் 6,749 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என மாநிலப் பேரிடர் மேலாண்மை குழு (ஜேபிபிஎன்) தெரிவித்துள்ளது.

இன்று காலை 10 மாவட்டங்களிலும் வெயிலுடன் கூடிய வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை பெக்கோக்கில் உள்ள பெக்கோக் அணை (19.09 மீட்டர்), சுங்கை செம்ப்ராங்கில் உள்ள செம்ப்ராங் அணை (11.07 மீட்டர்) மற்றும் செங்கராங்கில் உள்ள சுங்கை செங்கராங் அணை (3.23 மீட்டர்) என மொத்தம் மூன்று ஆறுகள் இன்னும் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன.

ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹவிஸ் காஜி, சமீபத்தில் மாவட்டத்தில் நீர் இறைக்கும் பணிகளை ஆய்வு செய்தபோது, வெள்ளத்தைச் சமாளிக்க மாநில அரசு தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருவதாகவும்,  ரமலானுக்கு முன்னால் அதைத் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :