NATIONAL

இந்தியப் பாரம்பரியத் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை: நாளை இரு அமைச்சகளுடன் பேச்சு- சிவக்குமார் தகவல்

பூச்சோங், மார்ச் 22- நாட்டில் இந்தியத் தொழில்துறைகள் குறிப்பாக முடித்திருத்தும் நிலையங்கள், ஜவுளியகங்கள் மற்றும் நகைக்கடைகள் அந்நிய தொழிலாளர்கள் 
பற்றாக்குறையை எதிர் நோக்கி இருக்கிறது.

வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் இந்தியப் பாரம்பரிய தொழில் துறைகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன.

இந்நிலையில்
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் இரு அமைச்சர்களையும் நாளை வியாழக்கிழமை சந்திக்கவிருப்பதாக மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஜவுளி, நகை பொற்கொல்லர், சிகையலங்கரிப்பு ஆகிய தொழில் துறைகளில் கடுமையான அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர் நோக்கி 
இருப்பதை நன்கு அறித்துள்ளேன்.

கடந்த பல ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கும் இந்த பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காண உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன், உள்நாட்டு 
வர்த்தக வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் அய்யூப் 
ஆகியோருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்.

இந்தப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என இரு அமைச்சையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நேற்று பைனாரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவுக்குப் பின்னர் நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

Pengarang :