NATIONAL

மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் 18.06 மில்லியன் கோழி முட்டைகளை விநியோகித்து உள்ளது

கோலாலம்பூர், மார்ச் 22: மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (ஃபாமா) கடந்த ஆண்டு நவம்பர் முதல் இன்று வரை மொத்தம் 18.06 மில்லியன் கோழி முட்டைகளை அதன் 368 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகித்து உள்ளது.

நாட்டில் முட்டையின் பற்றாக்குறையை சமாளிக்க ஏஜென்சியின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று ஃபாமா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது

“தொழில்துறை முனைவோர்களோடு ஒப்பந்த அமர்வுகளை நடத்துவதன் மூலமும், நாடு முழுவதும் கோழி முட்டையை சந்தைப்படுத்துதல் குறித்து விவாதிப்பதன் மூலமும் ஃபாமா செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

உணவுப் பாதுகாப்புப் பிரிவின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஃபாமா எப்போதும் வேளாண் உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது அல்லது நுகர்வோருக்கு வேளாண் உணவுகளின் சந்தைப்படுத்தல் சங்கிலி தொடர்ந்து பலப்படுத்தப்படுகிறது.

பிப்ரவரி 2023 வரை, ஃபாமா 1,568 சில்லறை விற்பனை நிலையங்களையும் 57,108 தொழில் முனைவோரையும் RM387 மில்லியன் செலவில் உருவாக்கியது.

“விவசாய தொழில் முனைவோர் தங்கள் விவசாயப் பொருட்களை நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப் படுத்துவதற்கும் ஃபாமா அதன் சேவைகளை மேம்படுத்துகிறது.

அதே நேரத்தில் சந்தையில் எப்போதும் போதுமான விவசாய உணவுப் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்த நுகர்வோருக்கு உதவுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின் இன்று ஃபாமா தலைமையகத்திற்கு வருகை புரிந்து நாட்டின் விவசாய உணவு சந்தைப்படுத்தல் துறையில் வாரியத்தின் பங்கு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவார்.

– பெர்னாமா


Pengarang :