SELANGOR

பல்வேறு சேவைகளை வழங்கும் ஓரிட மைய செயலி- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அறிமுகம்

ஷா ஆலம், மார்ச் 23- பொது மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கும்
ஒரிட மையச் செயலியை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம்
அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.பி.எச்.எஸ். கோ (MPHS Go) எனும் இந்த செயலி வாயிலாக இணையம்
வழி புகார் செய்வது மதிப்பீட்டு வரியைச் செலுத்துவது போன்ற பணிகளை
மேற்கொள்ள முடியும் என்று நகராண்மைக் கழகம் கூறியது.

மற்ற அரசாங்க இணையச் சேவைகளையும் பொது மக்கள் பயன்படுத்த
முடியும் என்பதோடு அத்துறைகளுடன் தொடர்பு கொள்ளவும் இயலும்
என்று அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த செயலியை ஆஃப்லைன் எனப்படும் இணையத் தொடர்புக்கு
அப்பாற்பட்ட தருணங்களிலும் பயன்படுத்த முடியும். இந்த செயலி கால
மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது தரம் உயர்த்தப்பட்டு வரும் எனவும்
அந்த பதிவு குறிப்பிட்டது.


Pengarang :