ANTARABANGSA

கம்போடிய மன்னருடன் பிரதமர் சந்திப்பு

கோலாலம்பூர், மார்ச் 28- கம்போடியாவுக்கு முதன் முறையாக
அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம், கம்போடிய மன்னர் நோரோடோம் சிகாமோனியை நேற்று
அரச அரண்மனையில் சந்தித்தார்.

கம்போடிய மன்னருடனான இச்சந்திப்பின் போது கடந்த 66 ஆண்டுளாக
இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் இரு தரப்பு உறவை மேலும்
வலுப்படுத்துவதற்கு மலேசியா கொண்டுள்ள கடப்பாட்டை தாம்
எடுத்துரைத்ததாகப் பிரதமர் அன்வார் நேற்றிரவு தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருகையின் ஒரு பகுதியாக கம்போடியாவின் சென்ட் தலைவர்
சேய் சும் மற்றும் தேசிய நாடாளுன்ற அவைத் தலைவர் ஹெங் சாம்ரின்
ஆகியோரையும் பிரதமர் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இடைவிடா நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியிலும் கம்போடியாவில் வசிக்கும்
மலேசியர்களை அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரகத்தில் நான் சந்தித்து
ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும்
முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தேன் என்று அவர் அப்பதிவில்
குறிப்பிட்டார்.

கம்போடியாவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டு பிரதமர் அன்வார்
நேற்று நோம் பென் சென்று சேர்ந்தார். கடந்த 1957ஆம் ஆண்டில்
தொடங்கிய இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்
அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


Pengarang :