NATIONAL

முஸ்லீம் அல்லாதோருக்கும் கட்டாய திருமணப் பயிற்சி- ஆய்வினை மேற்கொள்ள அமைச்சு நிலையில் செயல்குழு

கோலாலம்பூர், மார்ச் 28- முஸ்லீம் அல்லாத ஜோடிகளுக்குத்
திருமணத்திற்கு முந்தையப் பயிற்சியை நடத்துவதை
கட்டாயமாக்குவதற்கான சாத்தியம் ஆராய்ப்பட்டு வருகிறது. இந்த
திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக செயல்குழு ஒன்றை
அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய மகளிர், சமூக மற்றும் குடும்ப
மேம்பாட்டுத் துறை அமைச்சு செயலறிக்கையைத் தயாரித்து வருகிறது.

அந்த செயல்குழு முன்வைக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வெகு
விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று மகளிர்,
குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் அய்மான்
அதிரா சாபு கூறினார்.

மேலவையில் இன்று அரச உரை மீதான விவாதத்தை முடித்து வைத்து
உரையாற்றுகையில் துணையமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இல்லற
வாழ்க்கைத் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக
விரைவில் மணம் புரியவிருக்கும் முஸ்லீம் அல்லாத ஜோடிகளுக்கும்
திருமணப் பயிற்சி நடத்தப்பட வேண்டும் என செனட்டர் அக்னான் ஏதோக்
முன்னதாக மேலவையில் பரிந்துரைத்திருந்தார்.


Pengarang :