சரவாக்கில் அனைத்து தற்காலிகத் தங்கும் மையங்களும் மூடப்பட்டன

சிபு, மார்ச் 28: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் அவரவர் வீட்டிற்கு திரும்பியதைத் தொடர்ந்து கனோவிட்டில் செயல்பட்டு வந்த தற்காலிகத் தங்கும் மையம் நேற்று மதியம் 1.30 மணி அளவில் மூடப்பட்டது.

தற்போது எந்த ஒரு தற்காலிகத் தங்கும் மையமும் செயல்பாட்டில் இல்லை என சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை அதிகாலையிலிருந்து உலு ஙாமா பகுதியில் பெய்த இடைவிடாத மழையால் நிரம்பி வழியும் ஙாமா ஆற்றின் கரையில் இருந்த மூன்று நீண்ட வீடுகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :