NATIONAL

திறந்த டோல்  கட்டண முறையை அமல்படுத்துவதில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள் பங்கேற்பு

கோலாலம்பூர், மார்ச் 28: எதிர்வரும் செப்டம்பர் மாத பிற்பகுதியில் தொடங்கவுள்ள திறந்த டோல் கட்டண முறையை அமல்படுத்துவதில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள் பங்கேற்க ஒப்புக்கொண்டன.

பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, புதிய ஒப்பந்தத்தில் டமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (எல்டிபி), மேற்கு கேஎல் போக்குவரத்து விநியோகத் திட்டம் (ஸ்பிரிண்ட்), ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்), ஸ்மார்ட் டன்னல் மற்றும் கோலாலம்பூர்-புத்ராஜெயா விரைவுச்சாலை ஆகியவை அடங்கும் என்றார்.

“நான் முன்பே தெரிவித்தது போல், இந்த திறந்த கட்டண முறை பல்வேறு நெடுஞ்சாலைகளில் கட்டங் கட்டமாகச் செயல்படுத்தப்படும்.

“இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் மல்டி லேன் ஃபாஸ்ட் ஃப்ளோ (எம்எல்எஃப்எஃப்) முறையை செயல்படுத்துவதை உறுதிசெய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் மூலம் தெரிவித்தார்.

மார்ச் 24 அன்று, அறிவிக்கப்பட்ட பட்டர்வொர்த்-கூலிம் நெடுஞ்சாலை உட்பட ஆறு நெடுஞ்சாலைகள் திறந்த டோல் கட்டண முறையை அல்லது அந்தந்த நெடுஞ்சாலைகளில் பயனர்கள் டோல் செலுத்தும் முறைகளை தேர்வுசெய்யும் வகையில் திறந்த கட்டண முறை செயல்படுத்தப்படும் என்று நந்தா அறிவித்தார்.

இது திறந்த கட்டண முறையை செயல்படுத்துவதில் ஈடுபடும் நெடுஞ்சாலைகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 11ஆக உயர்ந்துள்ளது என்றார்.

– பெர்னாமா


Pengarang :