SELANGOR

கனமழையால் ஒன்பது பகுதிகளில் விழுந்த பல மரங்கள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், மார்ச் 29: சுபாங் ஜெயா மாநகராட்சியின் (MBSJ) விரைவுக் குழு உறுப்பினர்கள் நேற்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றால் ஒன்பது பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்றினர்.

ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்டானா, பெர்சியாரான் பஹாகியா புத்ரா ஐட் மற்றும் ஜாலான் ஸ்ரீ அமான் தம்பஹான் ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்து சாலையை மறைத்த சம்பவம் நடந்ததாக  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதே சம்பவம் பெர்சியாரான் தாசிக் ப்ரிமா பூச்சோங் பத்து 12, பெர்சியாரான் புத்ரா பெர்டானா, ஜாலான் புத்ரா பெர்மை 10/4e மற்றும் 10/4g மற்றும் ஜாலான் ஜுருதரா பூச்சோங்கிலும் நடந்தது.

“சுபாங் ஜெயா மாநகராட்சியின் (பந்தாஸ்) துரித சேவை துறையைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களின் பலத்துடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன், அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகச் செயல்படுத்தப் பட்டன,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கட்டளை மையத்தை 03-8024 7700 இல் தொடர்பு கொள்ளலாம். ஏதேனும் புகார்கள் அல்லது அவசர நிலைகள் இருந்தால் சுபாங் ஜெயா மாநகராட்சியின் பொது புகார் மேலாண்மை அமைப்பை (SISPAA) பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


Pengarang :