NATIONAL

பி.எஃப்.ஏ. 2023 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் ஹைனான் சென்று சேர்ந்தார்

ஹைனான், (சீனா), மார்ச் 30- சீனாவுக்கான நான்கு நாள் அதிகாரப்பூர்வ
வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
ஹைனான் வந்து சேர்ந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு
நடைபெறும் 2023 ஆசிய வருடாந்திர மாநாட்டிற்கான போ ஆய்வரங்கில்
(பி.எஃப்.ஏ. 2023) அவர் பங்கேற்கவிருக்கிறார்.

பிரதமர் பயணம் செய்த சிறப்பு விமானம் நேற்று உள்நாட்டு நேரப்படி
மாலை 5.29 மணிக்குப் போ அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் ஊராட்சி மன்ற
மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோரும் இந்த பயணக்குழுவில்
இடம் பெற்றுள்ளனர்.

ஹைனான் சென்று சேர்ந்த பிரதமரை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ
டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர், ஹைனான் துணை கவர்னர் சென்
ஹூவாயு, வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ
அம்ரான் முகமது ஜின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நேற்றிரவு இங்குள்ள கோல்டன் கோஸ்ட் ஹோட்டலில் நடைபெற்ற
இஃப்தார் விருந்தில் 70 பேரடங்கிய பி.எஃப்.ஏ. மாநாட்டிற்கான மலேசிய
பேராளர் குழுவினருடன் பிரதமர் கலந்து கொண்டார்.

இன்று பி.எஃப் ஏ மாநாட்டில் உரை நிகழ்த்துவதற்கு முன்னர் சிங்கப்பூர்
பிரதமர் லீ ஸியேன் லுங்குடன் இருதரப்பு நலன்கள் குறித்து பிரதமர்
பேச்சு நடத்துவார்.


Pengarang :