NATIONAL

கழிப்பறையில் பதுங்கியும் விதிவிடவில்லை- தீயில் நான்கு சிறார்கள் உயிரிழந்த பரிதாபம்

மூவார், மார்ச் 30: இங்குள்ள கம்போங் சபாக் ஆவோரில் உள்ள
வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த நான்கு
சிறார்களும் தீஜூவாலையிலிருந்து உயிரைக் காத்துக் கொள்ளும்
பொருட்டு வீட்டின் கழிப்பறையில் தஞ்சம் புகுந்ததாக நம்பப்படுகிறது.

இரவு மணி 7.49 மணியளவில் நிகழந்த இந்த தீவிபத்தில் புத்ரி ஆயிஷா
தென்கோ தோ (வயது 8), முகமது ஹக்கிம் (வயது 6), முஸதாகிம் (வயது
4), ஃபாத்திமா ஆயிஷா (வயது 3) அகிய நான்குச் சிறார்களும் வீட்டின்
கழிப்பறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக மூவார் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ராய்ஸ் முக்ரிஸ் அஸ்மான் கூறினார்.

தீவிபத்து ஏற்பட்ட போது அந்த சிறார்களின் அபயக்குரலை அண்டை
வீட்டார் கேட்டதாக அவர் சொன்னார்.

அவர்கள் அனைவரும் உதவிக் கோரி கூச்சலிட்டுள்ளனர். வீட்டிலிருந்து
வெளியேற அவர்கள் முயன்றுள்ளனர். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக
அவர்கள் வீட்டின் கழிப்பறையில் பதுங்கியுள்ளனர் என்றார் அவர்.

நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற போது வீட்டின் பின்புறக் கதவு
முற்றிலும் எரிந்துபோயிருந்தது. அந்த கதவு பூட்டப்படிருந்ததா என்று
தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது அந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோர்களும்
வீட்டில் இல்லை என்பதோடு கதவுகளும் பூட்டப்படவில்லை என்று அவர்
மேலும் தெரிவித்தார்.

அக்குழந்தைகளின் தந்தையான மியன்மார் ஆடவர் அருகிலுள்ள
உணவகத்திற்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அவர்களின் தாயார்
நோன்பு துறப்பதற்காக உணவு வாங்கும் பொருட்டு கடைக்கு
சென்றிருந்தார் என்றார் அவர்.


Pengarang :