SELANGOR

மலேசியாவில் உள்ள 10 மகிழ்ச்சியான நகரங்களில் ஒன்றாக கிள்ளான் தேர்வு

கிள்ளான், மார்ச் 30: 2022 ஆம் ஆண்டுக்கான மலேசியாவில் உள்ள 10 மகிழ்ச்சியான நகரங்களில் ஒன்றாகக் கிள்ளான் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிகழ்வு மார்ச் 20 அன்று நகராண்மைக் கழகத்தின்  (பிபிடி) உலக மகிழ்ச்சி தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்றது.

“மகிழ்ச்சிக் குறியீடு என்பது கிள்ளான் மக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியின் நிலையைப் பற்றிய பொதுவான அளவீடு ஆகும்.

“நாட்டில் உள்ள 117 பிபிடிகளில் இருந்து 42,000 பேர், வழங்கப்பட்ட கேள்விதாளுக்குப் பதிலளித்ததன் மூலம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,” என்று கூறினார்.

அக்கேள்வித்தாளில் இடம்பெற்ற வாழ்க்கை, உடல்நலம், குடும்பம் மற்றும் அண்டை உறவுகள், நிதி மேலாண்மை, சமூக நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ப்பட்டன என்று நோரைனி விளக்கினார்.

சமூக வசதிகள், பிபிடி சேவைகள், பிரதிநிதி சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரம் ஆகிய அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

மகிழ்ச்சியான நகர விருதைப் பெற்ற மற்ற நகரங்கள் பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்; மஞ்சோங், பேராக்; குளுவாங், ஜொகூர்; குவா முசாங் மற்றும் கோலா க்ராய், கிளந்தான்; கோலா பிலா, நெகிரி செம்பிலான்; குவாந்தன் மற்றும் ரோம்பின், பகாங் மற்றும் அலோர் காஜா, மலாக்கா ஆகியவை ஆகும்.


Pengarang :