SELANGOR

அம்பாங் ஜெயா மாநகராட்சி  உணவு சந்தையுடன்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப்ரல் 3: அம்பாங் ஜெயா மாநகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க ஆறு தொடர் நிலையான உணவு சந்தை பிரச்சாரம் 2023ஐ ஏற்பாடு செய்கிறது.

அம்பாங் ஜெயா மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரச்சாரம், அம்பாங் ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதியை தூய்மையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 14 வரை ஆறு இடங்களில் இந்த நிகழ்வு நடைபெறும். அவை பண்டான் இண்டா உணவுச் சந்தை, புக்கிட் இண்டா உணவுச் சந்தை மற்றும் பண்டார் பாரு அம்பாங் உணவுச் சந்தை ஆகிய இடங்கள் ஆகும் என்று நகராண்மைக்கழகம் (பிபிடி) தெரிவித்துள்ளது.

“மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இப்பிரச்சாரம் முஹிபா காம்ப்ளக்ஸ் உணவு சந்தை, தாமான் மெலாவதி மற்றும் தாமான் ஸ்ரீ பாயு ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ளது.

“பொலிஸ்தெரியன் என்னும் உணவு எடுத்து செல்லும் பாத்திரம் பயன்படுத்துவதைத் தடைசெய்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துதல் மற்றும் அம்பாங் ஜெயா மக்கள் தங்கள் சொந்த கொள்கலன்களை உணவு வாங்க பயன்படுத்துவதை ஊக்குவித்தல்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு கவுண்டரும் திறந்துள்ளதாக அம்பாங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.

“இந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வாருங்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது பொறுப்பு”.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் அம்பாங் ஜெயா மாநகராட்சி சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை 03-42857007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :