NATIONAL

டாக்ஸி மற்றும் இ-அழைப்பு வாகனங்களைப் பயன்படுத்துவதற்குக் கால (வயது)வரம்பு 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 3: நாடு முழுவதும் டாக்ஸி மற்றும் இ-அழைப்பு சேவையில் பயன்படுத்தும் வாகனங்களின் பயனிட்டுக்காலம்   15 ஆண்டுகளாக  நீடிக்கப்பட்டுள்ளதாக   நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (எ.பி.எ.டி) அறிவித்துள்ளது.

இன்றைய அறிக்கையில் எ.பி.எ.டி இன் படி, தேசிய போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்காக டாக்ஸி மற்றும் இ-அழைப்பு துறையை பாதுகாக்க போக்குவரத்து அமைச்சகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏஜென்சியின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பயனீட்டு கால வரம்பு உச்சத்தை தொட்ட வாகனங்களுக்கு புதிய வரம்பு நீடிப்பு உதவும்,  இதன் பின்  கால வரம்பை எட்டும்  டாக்ஸி மற்றும் இ-அழைப்பு உரிம வகுப்பில் உள்ள வாகனங்களுக்கு நீட்டிப்பு பொருந்தும் என்கிறது.

“அதைப் பொறுத்தவரை, டாக்ஸி மற்றும் இ-ஹெயிலிங் துறை சேவையில் உள்ளவர்கள் தங்கள்  சேவையின் தரத்தை மேம்படுத்தி, இந்த சேவையை மக்களுக்கு நம்பகமான மற்றும் தரமான தேர்வாக முன்னெடுக்க முடியும் என்று APAD நம்புகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும் தகவல் மற்றும் விசாரணைகளை APAD இன் அதிகாரப்பூர்வ இணையதளம் www.apad.gov.my இல் காணலாம் அல்லது அருகில் உள்ள APAD அலுவலகத்திற்கு நேரடியாக வரவும்.

– பெர்னாமா


Pengarang :