SELANGOR

பொதுமக்களுக்கு ராயா பலகாரங்களை உள்ளடக்கிய 1,000  கொள்கலன்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 3: பண்டார் உத்தாமா தொகுதியில் ஐடில்பித்ரியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ராயா பலகாரங்களை உள்ளடக்கிய 1,000  கொள்கலன்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.

அதன் பிரதிநிதி ஜமாலியா ஜமாலுடின், இத்திட்டத்தை வெற்றியடைய செய்ய அவரது தரப்பு கிட்டத்தட்ட RM10,000 ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்களுக்கு ராயாப் பலகாரங்களை விநியோகிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

“பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது தவிர, சமூகத் தலைவர்கள் மற்றும் பண்டார் உத்தாமா தொகுதியில் எங்களுடன் பணியாற்றியவர்களுக்கும் அப்பலகாரங்கள் விநியோகிக்கப்படும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இலவச ராயா பலகாரங்களை வழங்குவதன் மூலம் குடியிருப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, சிறு வணிகர்களுக்கு வருமானம் ஈட்ட உதவுவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜமாலியா கூறினார்.

“கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு தங்கள் வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் வர்த்தகர்களுக்கு உதவுவதற்கு எங்கள் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்” என்று அவர் கூறினார்.


Pengarang :