NATIONAL

உலகச் சுகாதார நிறுவனம் ஏப். 7ஆம் தேதி 75வது நிறைவு நாளைக் கொண்டாடுகிறது

ஜெனிவா, ஏப் 4- உலக மக்களிடையே உடல் ஆரோக்கியதைக் பேணி காக்கும்
பிரதான அமைப்பாக விளங்கி வரும் உலகச் சுகாதார நிறுவனம் தனது
75வது நிறைவு நாளை இம்மாதம் 7ஆம் தேதி அனுசரிக்கிறது
சுகாதார மற்றும் பருவநிலைச் சவால்களை விரைந்து சமாளிப்பதற்கு
ஏதுவாக சுகாதாரப் பணியாளர்களின் நலனைக் காப்பதற்கும் அவர்களைப்
பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி உலகத்
தலைவர்களை உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர்
கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவான நோக்கத்திற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்தால்
எதுவும் சாத்தியம் என்பதை உலகச் சுகாதார நிறுவனத்தின் வரலாறு
நிரூபிக்கிறது என்று தெட்ரோஸ் அட்ஹனோம் கிப்ரியாசுஸ் கூறினார்.

சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் தேவையை ஈடுசெய்வதற்கு
ஏதுவாக சுகாதாரம் சம்பந்தப்பட்ட கல்வி, திறன் மேம்பாடு மற்றும்
கௌரவமான வேலை ஆகியவற்றில் முதலீடு செய்வதில் முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் சுகாதாரத் துறையில் குறிப்பாகக் குறைந்த
மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 1 கோடி சுகாதாரப்
பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மனித வரலாற்றில் அதிக
உயிர்களைப் பலி கொண்ட இரண்டாம் உலக போர் நடைபெற்று முடிந்த
சமயத்தில் உலக சுகாதார நிறுவனம் உதயமானது.

வரும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் தனது 75ஆம் ஆண்டு
நிறைவை எட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார சமபங்கிற்கான முயற்சியை முன்னெடுக்கும்படி தனது 194 உறுப்பு நாடுகளையும் இதர
பங்காளிகளையும் அது கேட்டுக் கொள்கிறது என்றார் அவர்.


Pengarang :