SELANGOR

ரஹ்மா உதவித்தொகை (STR) இரண்டாம் கட்டம் ஏப்ரல் 5 முதல் வழங்கப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல் 4: ரஹ்மா  பிரிம் உதவித்தொகை (STR) இரண்டாம் கட்டம் ஏப்ரல் 5 முதல் பதிவு செய்யப்பட்ட பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் RM1.26 பில்லியன் மதிப்பை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட  வழங்குதல் 8.7 மில்லியன்  B40 பெறுநர் களுக்கு  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட கிராமப்புறங்களில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அல்லது வங்கிக் கணக்கு இல்லாத பெறுநர்களும் அதே தேதியில் அவ்வுதவியைப் பெறுவார்கள்.

“வங்கிக் கணக்கு இல்லாத ரஹ்மா பெறுநர்கள் ஏப்ரல் 5 முதல் வங்கி சிம்பனான் நேஷனல் (பிஎஸ்என்) கிளையில் பணத்தைப் பெறலாம்.

” RM2.93 பில்லியன் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணம் 2023ஆம் ஆண்டில் B40 குழுவிற்கு வழங்கப்படும்” என்று அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையில், மூன்று மற்றும் நான்காம் கட்டத்திற்கான ரஹ்மா பிரிம் உதவித்தொகை ஜூலை மற்றும் நவம்பரில் அமைக்கப்பட்ட அட்டவணையின்படி மேற்கொள்ளப்படும்.

கடந்த மார்ச் 31 வரை, மொத்தம் 714,918 புதிய விண்ணப்பங்களும், 2,618,104 புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்களை https://bantuantunnai.hasil.gov.my என்ற இணைப்பின் உள்ள (FAQ) பகுதியில் பெறலாம்.


Pengarang :